Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Pages

Thursday, September 5, 2013

நல்வரவு


நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் வணக்கம்,

நமது அன்றாட வாழ்வில் நாம் பல்வேறு பணிகளை மேற்கொள்கிறோம். ஆனால் அந்த வேலையைப் பற்றிய “ முழுமையான தகவலை “ நாம் அறிந்து வைத்திருக்கிறோமா என்றால், இல்லை என்ற பதில்தான் கிடைக்கும். அவ்வாறு முழுமையான தகவல் அல்லது விவரங்களை நாம் அறியாமலிருப்பதால் பணம், மற்றும் நேரம் மிகுதியாக விரயமாகிறது இது நேரடி இழப்பு. மற்றொருபுறம் அந்த குறிப்பட்ட வேலைக்கே நாம் அதிகமான நேரம் செலவிட்டால் அதனால் நமது மற்ற வேலைகள் தடைபடும் அல்லது தாமதமாகவே நடைபெறும். மேலும் நாம் எதிர்பார்த்த செயல் நடைபெறாத போது நாம் தோல்வி அடைந்ததாக ஒரு பிம்பம் நம் மனதில் பதிந்து மன உளைச்சல் ஏற்படும்.

இதற்கான காரணங்கள்,

1.       நமக்குத் தெரியாத ஒரு தகவலை பிறரிடம் கேட்டறிவதை கௌரவக் குறைச்சல் என்று நினைக்கிறோம். “ இந்த பஸ் எந்த ஊருக்குப் போகும்?” எனக் கேட்கும் மனநிலையில்தான் நம்மில் பலரும் இருக்கிறோம்.

2.       பெரும்பாலான மக்களுக்குத் தெரியாத தகவல்களை நாம் அறிந்து வைத்திருப்பதை பெருமையாக கருதுகிறோம். இது தவறல்ல, ஆனால் இதை அப்படியே மெயின்டெயின் பண்ணுடா சூனா பானா என்று நினைப்பதுதான் தவறு.

மேற்சொன்ன இவ்விரண்டு நடைமுறையை சற்று வயதானவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையே அதிகமாக காணமுடியும். சம வயதுடைய நண்பர்களிடமும் இது தொடர்கதையாக உள்ளது.

இத்தகைய சூழலை நாம் எப்படி சரி செய்வது ?
1.  
     ஒருவர் நம்மிடம் ஏதாவது சந்தேகம் கேட்டால், இதுகூடத் தெரியாதா என்று உதாசீனப்படுத்துவதோ எள்ளி நகையாடுவதோ கூடாது.

2.       தனக்குத் தெரியாத ஒரு தகவல் அல்லது விவரங்களை ஒருவர் நமக்கு சொல்லிக்கொடுக்கிறார் என்றால் அவரை நாம் குருவாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.( சித்தமருத்துவம் அழிந்தது மாபெரும் இழப்பு )

சரி, எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது.
இதை யாரிடம் கேட்பது ?
இதைப்பற்றி அவருக்குத் தெரியமா ?
அப்படியே தெரிந்தாலும், நமக்கு விளக்கிச் சொல்வாரா ?
அவர் சொல்ல நினைத்தாலும் நேரம் கிடைக்குமா ?......
இப்படி பல கேள்விகள் நமது மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.

இந்த இயந்திர வாழ்க்கையில் பக்கத்து வீட்டில் குடியிருப்பவரின் பெயரை தெரிந்துக்கொள்ளவே நமக்கு பல மாதங்கள் ஆகின்றது. பிறகு எப்படி இந்த தகவல் பரிமாற்றங்கள் எல்லாம் சாத்தியம்? அப்படியே தகவல் பரிமாறப்பட்டாலும் அது இரு மனிதர்களுக்கு மட்டுமே பயன்படும். இன்றைய நவீன யுகத்தில் இணையம் ஒரு சிறந்த தொழில்நுட்பம். நாம் பகிர்ந்து கொள்ளும் செய்திகளை எல்லாம் இணையத்தில் பதிவு செய்தால் நம்மை போன்ற அனேக நண்பர்களுக்கும் பயன்படும். ( நான் இந்த தளத்தை தொடங்குவதற்கான காரணம் இதுதான் )

எங்கு தகவல் பரிமாற்றம் எளிதாகவும், விரைவாகவும், மிகுதியாகவும் நடைபெறுகிறதோ அந்த சமுதாயமே வளர்ச்சிப்பாதையில் பயணிக்க முடியம். எனக்கு தெரிந்த செய்திகளையும் தகவலையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள மிகுந்த ஆவலோடு இருக்கிறேன். நீங்களும் அரசியல் தவிர்த்து கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம்... என உங்களுக்கு தெரிந்த செய்திகளையும் தகவலையும் பதிவு செய்து நமது தமிழ் சமுதாயம் மேம்பட தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கிட வேண்டுகிறேன்.

அன்புடன்,

இராமசெயம்.

No comments:

Post a Comment